தமிழக செய்திகள்

சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்காத 69 ஆயிரத்து 490 பேருக்கு நோட்டீஸ்

சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்காத 69 ஆயிரத்து 490 பேருக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை இதுவரை அமைக்காத 69 ஆயிரத்து 490 பேருக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகம் முழுவதும் சரியான மழைப்பொழிவு இன்றி வறட்சி ஏற்பட்டதை தொடர்ந்து, மழைநீர் சேமிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னையில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நடவடிக்கையை முறையாக மேற்கொள்ளும் பணியை சென்னை மாநகராட்சி மேற்பார்வை செய்தது. இதில் சென்னையில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை இதுவரை அமைக்காத 69 ஆயிரத்து 490 பேருக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதேபோன்று 38 ஆயிரத்து 507 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை சீரமைக்க அதன் உரிமையாளர்களுக்கு ஒரு வாரம் கெடு விதித்துள்ள மாநகராட்சி, தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை