தமிழக செய்திகள்

மின்தடை குறித்த புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

மின்தடை குறித்த புகார் தெரிவிக்க தொலைபேணி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் திருவண்ணாமலை மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் சேவை மையத்தினை 9445855768 என்ற வாட்ஸ் அப் எண், தொலைபேசி எண் 04175-232363 மற்றும் கைபேசி எண் 9499970214 ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவற்றை தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின் தடை மற்றும் மின்சார பொருட்கள் சேதாரம் போன்ற புகார்களை தங்கள் பகுதிக்கு உட்பட்ட பிரிவு அலுவலர் மற்றும் உதவி செயற் பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களுடைய மின் தடை குறித்த புகார்களை 9498794987 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தங்களது மின் தடை குறித்த புகார்களை கணினி மயமாக்கப்பட்ட மின் தடை புகார் மையத்தில் பதிவு செய்தால் மின் தடை நிவர்த்தி செய்யப்படும்.

இந்த தகவலை திருவண்ணாமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பழனிராஜ் தெரிவித்து உள்ளார்.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி