தமிழக செய்திகள்

மது ஒழிப்பை வலியுறுத்தி நூதன போராட்டம்

மது ஒழிப்பை வலியுறுத்தி திசையன்விளையில் நூதன போராட்டம் நடந்தது.

திசையன்விளை:

மதுஒழிப்பு போராளி சசி பெருமாள் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திசையன்விளை காமராஜர் சிலை முன்பு அலங்கரிக்கப்பட்ட சசி பெருமாளின் படத்துக்கு காமராஜர் சிவாஜி கணேசன் பொதுநல இயக்க தலைவர் சிவாஜி முத்துக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மது ஒழிப்பை வலியுறுத்தி, காமராஜரின் முகமூடி அணிந்த ஏராளமானவர்கள் பங்கேற்று மதுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மதுவினால் பெண்கள் விதவையாவதை தடுக்க வலியுறுத்தி, மதுபாட்டிலுக்கு தாலி கட்டியும், மஞ்சள் குங்குமமிட்டும், மதுவை தரையில் கொட்டியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.