தமிழக செய்திகள்

2020-குள் சாலை விபத்தின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு பாதியாக குறையும்- அமைச்சர் விஜயபாஸ்கர்

2020-குள் சாலை விபத்தின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு பாதியாக குறையும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக போக்குவரத்து கழகத்திற்கு முதல் அமைச்சர் ரூ. 1250 கோடி ஒதுக்கி உள்ளார். விழாக்காலங்களில் மட்டுமே ஓட்டுனர்களுக்கு கூடுதல் பணி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் விபத்து நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. 2020-குள் சாலை விபத்தின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு பாதியாக குறையும். போக்குவரத்து துறை நிதி நிலையை வைத்து, தற்போது 2000 பேருந்து வாங்கப்படுகிறது. அடுத்த கட்டமாக 2000 பேருந்துகள், வாங்கப்படும். பழைய பேருந்துகள் படிப்படியாக குறைக்கப்பட்டு புதிய பேருந்துகள் இயக்கப்படும். தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில், அதிநவீன போக்குவரத்து பயிற்சி பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்