தமிழக செய்திகள்

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

நீடாமங்கலத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.

தினத்தந்தி

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கையாளும் இடைநிலை ஆசிரியர்களுக்கான 2 நாள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியினை வட்டார கல்வி அலுவலர் சம்பத் தொடங்கி வைத்தார். மன்னார்குடி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சத்யா முன்னிலை வகித்தார். பயிற்சியை தொடக்க கல்வி அலுவலர் சவுந்தர்ராஜன் பார்வையிட்டார். வட்டார கல்வி அலுவலர் முத்தமிழன் ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.பயிற்சியில் வகுப்பறையில் ஏற்படக்கூடிய சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும். மாணவர்களுக்கு எண் அறிவு மற்றும் எழுத்தறிவை எவ்வாறு மேம்படுத்த வேண்டும். கற்றல், கற்பித்தல் பொருட்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் போன்ற கருத்துக்கள் வழங்கப்பட்டது. பயிற்சியில் இடைநிலை ஆசிரியர்கள் 80 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பயிற்சி ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சத்யா செய்திருந்தார். 

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்