தமிழக செய்திகள்

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

திமிரியில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.

திமிரி

திமிரி ஒன்றியத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி 2 கட்டமாக திமிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வட்டார வள மையத்தில் நடைபெற்றது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் குமரேசன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் முருகன், ஏழுமலை, விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பயிற்சியை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பிரேமலதா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பார்வையிட்டனர்.

பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சிகள் குறித்தும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அடிப்படையில் அவசியம் கற்பிக்கப்பட வேண்டிய வாசிக்கும் திறன், எழுதுதல் திறன் மற்றும் எண்கணித அடிப்படை செயல்பாடுகள் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினர்.

இதில் 120 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். பயிற்சியின் முடிவில் ஆசிரியர்கள் அனைவருக்கும் எண்ணும் எழுத்தும் கையேடு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் அய்யப்பன் செய்து இருந்தார். முடிவில் செல்வன் நன்றி கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...