தமிழக செய்திகள்

கல்குவாரி குட்டையில் குதித்து நர்சு தற்கொலை

ஓசூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த நர்சு கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஓசூர்

காதலுக்கு எதிர்ப்பு

ஓசூர் தாலுகா பேரிகையை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் காவ்யா (வயது 21). இவர், ஜோதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவரது பெற்றோர் மகளை கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த காவ்யா நேற்று முன்தினம் ராஜாபுரம் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தொரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை

அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் காவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நர்சு கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்து காண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...