தமிழக செய்திகள்

ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி

சங்கராபுரத்தில் ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தினத்தந்தி

சங்கராபுரம்

சங்கராபுரம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊட்டச்சத்து மாதவிழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட திட்ட அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணிதாகப் பிள்ளை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அய்யப்பன், செல்வகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அகிலா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன் கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இப்பேரணியில் ரத்தசோகை, தாய்பாலின் நன்மைகள், இரும்புச்சத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து புறப்பட்ட இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சங்கீதா, மேற்பார்வையாளர்கள் ரமணி, சரஸ்வதி, பிரேமா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து