தமிழக செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர் செல்வம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர் செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் கடந்த சனிக்கிழமை அன்று தனித்தனியாக அவசர வழக்குகளை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட வேண்டாம். தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் என கூறினார்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஓ.பன்னீர் செல்வமும் இன்று சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க கோரி முறையிட்டனர்.

ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனு விசாரணையுடன் சேர்த்து, நாளை மறுநாள் (புதன்கிழமை) இந்த மனு விசாரிக்கப்படும் என நீதிபதி அறித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...