சென்னை,
அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து, தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் செனட் உறுப்பினரான கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருடைய தாயார் தமிழகத்தை சேர்ந்தவர். கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பாக தமிழர்கள் உள்பட இந்தியர்களுக்கு பெருமைக்குரிய நிகழ்வு ஆகும். கமலா ஹாரிசுக்கு என்னுடைய இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.