தமிழக செய்திகள்

துணை ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்று 3 ஆண்டு நிறைவு: வெங்கையா நாயுடுவுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

துணை ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்று 3 ஆண்டு நிறைவடைவதையொட்டி, வெங்கையா நாயுடுவுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

நாட்டின் துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பொறுப்பு ஏற்று 3 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெங்கையா நாயுடுவுக்கு, ஓ.பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மூத்தவர்கள் அடங்கிய அவையின் தலைவராக (மேலவை சபாநாயகர்) 3 ஆண்டு கால சகாப்தத்தை வெற்றிகரமாக முடித்ததை குறிக்கும், நமது பாராளுமன்றத்தின் ஆண்டுகளில் இது ஒரு ஒளிமயமான நாள் ஆகும். துணை ஜனாதிபதியின் பார்வை, தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து, அவையை குறுகிய காலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாக நடத்துவதற்கு சிறப்பாக உதவியது.

வரும் ஆண்டுகளில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், பெருஞ்சிறப்பு கிடைக்கவும் அருள் புரியவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நான் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்