தமிழக செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை காலத்தின் கட்டாயம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி வரும் 23ஆம் தேதி நடைபெறும். அதிமுகவில் ஒற்றைத் தலைமையை அனைவரும் விரும்புகின்றனர்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று மட்டுமே கூறினேன். யார் என்று கூறவில்லை. ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவே முடிவு செய்யும். பொதுக்குழுவில் சுமூகமான முடிவு எட்டப்படும்.

நான் ஓ.பன்னீர் செல்வம் பக்கமும் இல்லை, எடப்பாடி பழனிசாமி பக்கமும் இல்லை. கட்சி தான் எனக்கு முக்கியம். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் இல்லை. சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை. அவரைப் போல ஒ.பன்னீர்செல்வத்திற்கும் நடக்கும் என்று கூறுவது தவறு" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு