தமிழக செய்திகள்

ஒபிஎஸ் டெல்லிக்கு திடீர் பயணம்: பாஜக தலவர்களை சந்திக்க திட்டமா?

முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் டெல்லியில் இரண்டு நாட்கள் தங்கியிருப்பார் என்று சொல்லப்படுகிறது

தினத்தந்தி

சென்னை,

முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். கடந்த 24 ஆம் தேதி சென்னை வேப்பேரியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய ஓ பன்னீர் செல்வம், அதிமுக 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துள்ளது. அதிமுகவின் இந்த நிலையை பார்த்து நாம் கண்ணீர் விடும் நிலை உள்ளது.

வரும் டிசம்பர் 15 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட போகிறோம். எனவே டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பை நடத்தி இனியாவது திருந்த வேண்டும். இல்லாவிட்டால் திருத்தப்படுவீர்கள். எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு எங்களை தள்ளி விடாதீர்கள என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ஓ பன்னீர் செல்வம் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

ஓ பன்னீர் செல்வம் டெல்லியில் இரண்டு நாட்கள் முகாமிட்டு பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியும் இன்று மதியம் டெல்லி சென்றுள்ள நிலையில், ஓ பன்னீர் செல்வத்தின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் ஓ பன்னீர் செல்வத்தை இணைக்கும் முயற்சியில் பாஜக மேலிடம் ஈடுபட்டுள்ளதா? என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு