தமிழக செய்திகள்

ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் வெற்றிடத்தை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார் -கராத்தே தியாகராஜன்

ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் வெற்றிடத்தை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார் என கராத்தே தியாகராஜன் கூறி உள்ளார்.

சென்னை,

2001-ல் ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது துணை மேயராக இருந்தவர் கராத்தே தியாகராஜன். அப்போது அதிமுக தென் சென்னை மாவட்டச்செயலாளராக இருந்தார்.

அதிமுகவில் இருந்து காங்கிரசுக்கு வந்த கராத்தே தியாகராஜன் கூட்டணி தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தமிழக முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்து, அண்ணன் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் கடந்த கால நிகழ்வை நினைவுபடுத்த விரும்புவதாக கூறி ஸ்டாலினுக்கு எதிராக அறிக்கை விட்டார்.

இந்தநிலையில், இன்று தந்தி டிவிக்கு பேட்டி அளித்த கராத்தே தியாகராஜன் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் வெற்றிடத்தை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார். வரும் மார்ச் மாதத்திற்குள் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என கூறி உள்ளார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு