சென்னை,
ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் புதிய மனு ஒன்றை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். அதில், கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக விசாரித்த எனக்கு பலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
என்னுடைய விசாரணையின் போது அரசு அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுக்கும் இது போல கொலை மிரட்டல் வருகிறது. எனவே, என்னுடைய விசாரணை கமிஷனில் இடம் பெற்ற அனைவரது பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரணையை செப்டம்பர் 14-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.