தமிழக செய்திகள்

உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள்... ஐகோர்ட்டு மதுரைக்கிளை அதிரடி உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நில நிர்வாக ஆணையர் மற்றும் மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

தினத்தந்தி

மதுரை,

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நில நிர்வாக ஆணையர் மற்றும் மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலூரைச் சேர்ந்த ரமணிகேபால், வாங்கிய நிலத்திற்கான பட்டா, பஞ்சமி நிலம் என ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதெடர்பான வழக்கில், ரமணிகேபால் வாங்கிய நிலம் பஞ்சமி நிலம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதால், பட்டா வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. எனினும், பட்டா வழங்காமல் அதிகாரிகள் தாமதம் செய்து வந்தனர்.

இதையடுத்து, ரமணி கேபால் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பேது, கோர்ட்டு உத்தரவுகளை பின்பற்றாத நில நிர்வாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் பதிவு செய்தனர்.

மேலும், இருவரும் வருகிற 10ம் தேதி நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்