தமிழக செய்திகள்

மீன் மார்க்கெட் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை

ராமநாதபுரம் மீன் மார்க்கெட் பகுதியில் கெட்டுப்போன சுமார் 24 கிலோ எடையுள்ள மீன்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நகர் மீன் மார்க்கெட் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கெட்டுப்போன சுமார் 24 கிலோ எடையுள்ள மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை பினாயில் ஊற்றி அப்புறப்படுத்தப்பட்டது.

பின்னர் மீன் வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கிய அதிகாரிகள், இது போல கெட்டுப்போன மீன்கள் அல்லது ரசாயனம் கலந்த மீன்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது