தமிழக செய்திகள்

ஓலா, உபேர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்...!

சென்னையில் ஓலா, உபேர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

ஓலா, உபேர் போன்ற செயலியை அரசு ஏற்று நடத்த வேண்டும், வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயித்தல், பைக் டாக்ஸிகளை தடைசெய்தல் போன்ற பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி 3 நாட்களுக்கு போராட்டத்தில் ஈடுபட போவதாக ஓட்டுநர்கள் அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று அவர்கள் சென்னை சின்னமலையில் உள்ள சரக்கு போக்குவரத்து அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் ஓட்டுநர்கள் தங்களது போனில் இருந்து செயலியை நீக்கி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மதுரை,திருச்சி, கோவையிலும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

மேலும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நாளை பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு