தமிழக செய்திகள்

கஞ்சா வைத்திருந்த மூதாட்டி கைது

பழனியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.

பழனி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார், பஸ்நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது குளத்துரோடு பகுதியில் சந்தேகப்படும்படி கையில் பையுடன் நின்ற மூதாட்டியை பிடித்து விசாரணை நடத்தினர். முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அந்த பையில் கஞ்சா இருந்தது. விசாரணையில், அவர் பாலசமுத்திரம் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்த வீரன் மனைவி பாப்பாத்தி (வயது 60) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாப்பாத்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் பாப்பாத்தி நிலக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். கைதான பாப்பாத்தி மீது கஞ்சா விற்றது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு