தமிழக செய்திகள்

ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி

கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியாகியுள்ளார்.

தினத்தந்தி

கோவில்பட்டி(மேற்கு):

கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கும் லட்சுமில் மேம்பாலத்திற்கும் இடையில் திலகர் நகர் தண்டவாள பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதார். இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடியில் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த முதியவர் பச்சை கருப்பு நிற கட்டம் போட்ட கைலியும், நீல நிறத்தில் வெள்ளை கோடு போட்ட அரக்கை சட்டையும் அணிந்திருந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு பலியானாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை