தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

சுசீந்திரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானா.

தினத்தந்தி

மேலகிருஷ்ணன்புதூர்:

சுசீந்திரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானா.

சுசீந்திரம் பரப்புவிளை தெற்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 60). இவர் நேற்று அதிகாலை சுசீந்திரத்தில் இருந்து ஈத்தங்காடு செல்லும் சாலையில் டீ குடிப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நாகர்கோவில் அருகே உள்ள பீச்ரோடு பகுதியை சேர்ந்த கனகராஜ் (34) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சக்திவேல் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சக்திவேல் மனைவி பார்வதி சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கனகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை