தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழந்தார்

தினத்தந்தி

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் வெங்கட்சுப்பு (வயது 27). இவர் கடலூர் மத்திய சிறையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மயிலாடுதுறைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலையில் எருக்கூர் வழியாக கடலூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கொள்ளிடம் அருகே எருக்கூர் மெயின் ரோட்டை சேர்ந்த சம்பந்தம் (70) என்பவர் சாலையை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது முதியவர் மீது வெங்கட்சுப்பு ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், படுகாயம் அடைந்த சம்பந்தத்தை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சம்பந்தம் இறந்தார். இந்த விபத்து தொடர்பாக சிறைக்காவலர் வெங்கட்சுப்பு மீது கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்