தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

ஜோலார்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.

தினத்தந்தி

ஜோலார்பேட்டையில் உள்ள வாலாட்டியூர் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 70). இவர் நேற்று காலை ஜோலார்பேட்டை - நாட்டறம்பள்ளி சாலையில் உள்ள ஜங்களாபுரம் அருகே சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை மாசிலாமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இவரது மகன் ரமேஷ் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை