தமிழக செய்திகள்

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

ஒரத்தநாடு அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டா.

ஒரத்தநாடு;

ஒரத்தநாட்டை அடுத்துள்ள வடக்கிகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு (வயது70). விவசாயி. இவர் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு போராடிய தங்கராசுவை உறவினர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கராசு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தங்கராசு மனைவி கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து, தங்கராசு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...