தமிழக செய்திகள்

ரெயில் மோதி மூதாட்டி சாவு

மூதாட்டி சாவு

நாமக்கல் மாவட்டம் காவிரி ரெயில் நிலையத்துக்கும், ஆனங்கூருக்கும் இடைப்பட்ட ரெயில்வே தண்டவாளத்தில் மூதாட்டியின் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்து கிடந்தவர் நாமக்கல் மாவட்டம் ஓடுப்பள்ளி அன்னை சத்யாநகரை சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி லட்சுமி (வயது 85) என்பதும், அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதி இறந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து லட்சுமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு