தமிழக செய்திகள்

இயக்குனர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்குகளை திரும்ப பெற வேண்டும்: விஜயகாந்த் அறிக்கை

இயக்குனர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றிட 49 பேருக்கு எதிரான தேசதுரோக வழக்கை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்படுவது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தேச துரோக வழக்கு என்பது தேசத்திற்கு எதிராக மாறுபட்ட கருத்தோடு, கருத்துக்களை பதிவு செய்வதும் வன்முறையில் ஈடுபடுவதும் தான் ஒரு குற்றமாக இருக்க முடியும். தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு கடிதம் எழுதுவதே தேசிய குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படுவது சரியானது அல்ல.

இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்குகள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்காக போடப்பட்டு இருந்தால், அதை உடனடியாக திரும்ப பெற்று, உண்மையான தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பகிர்கின்ற ஒரு உரிமையை அனைவருக்கும் தர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது