தமிழக செய்திகள்

'அம்பேத்கர் பிறந்தநாளில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அம்பேத்கர் பிறந்தநாளில் தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ந்தேதி(நாளை) தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பபோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாக்டர் அம்பேத்கர் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து கடுமையாகப் போராடியவர் எனவும், அவர் ஒரு சமூக நீதிப் புரட்சியாளர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக அரசு சார்பில் அம்பேத்கருக்கு மணிமண்டபம் கட்டியதை சுட்டிக்காட்டியுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கரின் பிறந்தநாளில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம் என்றும், அவரது வழியில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட பாடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது