தமிழக செய்திகள்

காகித ஆலை சார்பில் புகழூர் நகராட்சிக்கு ரூ.30 லட்சம் வழங்கல்

காகித ஆலை சார்பில் புகழூர் நகராட்சிக்கு ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது.

புகழூர் காகித ஆலை நிறுவனத்தின் சமூக பொறுப்புடைமை செயல்பாடுகளின் (சி.எஸ்.ஆர்.பண்ட்) கீழ் புகழூர் நகராட்சி நிர்வாக திட்ட பணிகள் பயன்பாட்டிற்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காகித ஆலை நிறுவனத்தின் செயல் இயக்குனர் (இயக்கம்) சீனிவாசன், பொது மேலாளர் (மனித வளம்) கலைச்செல்வன், முதுநிலை மேலாளர் (மனித வளம்) சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு, ரூ.30 லட்சத்திற்கான காசோலையை புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன், நகராட்சி ஆணையர் பால்ராஜ் ஆகியோரிடம் வழங்கினர். அப்போது, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வள்ளிராஜ், நகராட்சி நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...