தமிழக செய்திகள்

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை திரும்ப பெற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனா காலத்திலும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னால் முடிந்தளவு மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்திலும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழ்நாடு அரசு உயர்த்தியிருப்பது சரியா? முறையா? நியாயமா?

இதனால் தமிழக அரசின் மதிப்புதான் குறையும்; விலைவாசி உயரும்; மக்களின் கவலைகள் கூடும்!

எனவே வரி உயர்வை திரும்பப் பெற்று, மக்களுக்கு உதவியாக இருக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்