தமிழக செய்திகள்

போடிமெட்டு மலைப்பாதையில்30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்:டிரைவர் உயிர் தப்பினார்

போடிமெட்டு மலைப்பாதையில் 30 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தினத்தந்தி

போடி தேரடி தெருவை சேர்ந்தவர் நாகையா (வயது 36). ஜீப் டிரைவர். நேற்று காலை இவர், போடியில் இருந்து ஜீப்பில் ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறைக்கு சென்றார். பின்னர் ஏலக்காய் மூட்டைகளை இறக்கிவிட்டு அங்கிருந்து அவர் ஜீப்பில் போடிக்கு வந்து கொண்டிருந்தார். போடிமெட்டு மலைப்பாதையில் காத்தாடி பாறை அருகில் 18-வது கொண்டை ஊசி வளைவில் ஜீப் சென்றது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதற்கிடையே சாமர்த்தியமாக செயல்பட்ட நாகையா ஜீப்பில் இருந்து சாலையில் குதித்து உயிர் தப்பினார். ஆனால் ஜீப் மலைப்பாதையில் சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டு சுக்குநூறானது. இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து