தமிழக செய்திகள்

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி அழகர் கோவிலில் பக்தர்கள் விளக்கு ஏற்றி தரிசனம்

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி அழகர் கோவிலில் பக்தர்கள் விளக்கு ஏற்றி தரிசனம் செய்தனர்

தினத்தந்தி

அழகர்கோவில்,

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து நெய் விளக்குகள் ஏற்றிசாமி தரிசனம் செய்தனர். மேலும் முன்னதாக மூலவர் சாமி, உற்சவர் தேவியர், கள்ளழகர் பெருமாள், சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை மேளதாள இசையுடன், பட்டர்களின் வேத மந்திரங்களுடன் நடந்தது. தவிர நூபுர கங்கையிலும் பக்தர் புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர். முருகப் பெருமானின் 6-வது படைவீடு சோலைமுருகன் கோவிலில், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வித்தக விநாயகர், வேல் சன்னதியிலும் சிறப்பு பூஜை நடந்தது. இங்கும் பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். அழகர் மலை அடிவாரத்தில் உள்ள பதினெட்டாம் படி கருப்பணசாமி சன்னதியிலும், சந்தனம், மாலைகள், காணிக்கையாக வழங்கி பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் நெய் விளக்கேற்றி சாமிதரிசனம் செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து