சென்னை,
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் டிக்கெட் இயந்திர கோளாறால் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயணிகள் டிக்கெட் இல்லாமல் இலவசமாக அனுமதிக்கபட்டனர்.
தற்போது தானியங்கி பயணச்சீட்டு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டது. பயணச்சீட்டு இயந்திர கோளாறால் பயணிகள் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது நிறுத்தப்பட்டது என மெட்ரோ நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.