தமிழக செய்திகள்

தீபாவளியையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.!

ஒரு கிலோ ரூ.700க்கு விற்று வந்த மல்லிகை ரூ.1,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி,

தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் ஊட்டி, பெங்களூரு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

பண்டிகை நாட்களில் இங்கு பூக்கள் வாங்க பல்வேறு ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த சில நாட்களாகவே பூக்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை நாளை (12-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதனால் பூக்களை வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்குவதற்கு ஏராளமானோர் திரண்டனர். பூ மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

மேலும் பூக்களின் விற்பனை அதிகரிப்பால் அதன் விலை அதிகரித்து காணப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு அதன் விலை வருமாறு:- ஒரு கிலோ ரூ.700க்கு விற்று வந்த மல்லிகை ரூ.1,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.350க்கு விற்பனையான ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.1,250க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கனகாம்பரம் - ரூ.1,000, செவ்வந்தி - ரூ.170, ரோஜா - ரூ.100, மரிக்கொழுந்து - ரூ.100, கிரேந்திப்பூ - ரூ.40, அரளி - ரூ.80, சம்பங்கி - ரூ.30 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்