சென்னை,
நாட்டில் குடியரசு தினம் இன்று கோலாகலமுடன் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னை மெரினாவில் இன்று தேசிய கொடியை ஏற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தலைமை செயலக அதிகாரிகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேசிய கொடிக்கு அவர்கள் வணக்கம் தெரிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து சென்னை காமராஜர் சாலையில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.