தமிழக செய்திகள்

கம்பத்தில்குளங்களை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை

கம்பத்தில் குளங்களை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினத்தந்தி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்ப் முதல் வீரபாண்டி வரை முல்லைப்பெரியாறு மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடியும், 5 ஆயிரத்து 190 ஏக்கரில் ஒரு போக நெல் சாகுபடியும் நடைபெறுகிறது. மேலும் ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை கம்பம் பகுதிகளில் உள்ள வீரப்பநாயக்கன்குளம், ஒடப்படிகுளம், ஒட்டுக்குளம் உள்ளிட்ட குளங்களில் தேக்கி வைத்து விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒட்டுக்குளம் மற்றும் வீரப்பநாயக்கன் குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து பரவி கிடக்கிறது. அவை குளம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளன. மேலும் குளத்தில் கம்பம் நகரின் கழிவு நீர் கலப்பதால் தண்ணீர் மாசு அடைந்துள்ளது. எனவே ஆகாயத்தாமரையை அகற்றி கூடுதல் தண்ணீர் தேக்குவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை