தமிழக செய்திகள்

கம்பத்தில் ஆட்டோவை திருடிய டிரைவர் கைது

கம்பத்தில் ஆட்டோவை திருடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்

கம்பம் தாத்தப்பன்குளம் தெருவில் வசிப்பவர் அப்பாஸ் மந்திரி. கடந்த 3-ந்தேதி இவர், வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ஆட்டோவை மர்ம நபர் திருடி சென்றார். இதுகுறித்து அவர் கம்பம் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். மேலும் தாத்தப்பன்குளம், கோம்பை ரோடு, உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது சின்னமனூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் திருடு போன ஆட்டோவிற்கு மர்ம நபர் டீசல் நிரப்பும் காட்சி பதிவாகி இருந்தது. அதனை துருப்புச்சீட்டாக கொண்டு போலீசார் திருடனை தேடி வந்தனர். இந்நிலையில் திருடு போன ஆட்டோ மதுரையில் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் ஆட்டோவை மீட்டனர். மேலும் ஆட்டோவை திருடியவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான பிலால் (வயது 30) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிலாலை கைது செய்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...