தமிழக செய்திகள்

அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் ஒரே சார்ஜர் - ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்

ஸ்மார்ட் போன்கள், டேப்லட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு ஒரே வகையான சார்ஜர் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பிரஸ்சல்ஸ்,

அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் டைப்-சி வகையில் ஒரே சார்ஜர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் சட்டம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த புதிய சட்டத்திற்கு ஆதரவாக 602 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 8 உறுப்பினர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்ததாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தின்படி ஸ்மார்ட் போன்கள், டேப்லட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு ஒரே வகையான சார்ஜர் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த சட்டம் 2024-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட உள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்