தமிழக செய்திகள்

போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம்

ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கியது.

தினத்தந்தி

விருத்தாசலம், 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் விருத்தாசலம், கம்மாபுரம் ஒன்றியக்குழு சார்பில் போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கம் விருத்தாசலம் பாலக்கரையில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் வீரா வரவேற்றார். விருத்தாசலம் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தனர். இதில் மாநில முன்னாள் துணை செயலாளர் அசோகன், வக்கீல்கள் சங்க மாவட்ட செயலாளர் குமரகுரு, மாவட்ட முன்னாள் தலைவர் கலைச்செல்வன், மாவட்ட தலைவர் சின்னதம்பி, விவசாய சங்க தலைவர் செல்வகுமார், முன்னாள் வட்ட செயலாளர் நெல்சன் உள்பட பலர் கலந்து கொண்டு போதைக்கு எதிரான உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்