தமிழக செய்திகள்

பரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எங்களுக்கு ஒரு நாள் போதும்; வெற்றிவேல் பேட்டி

பரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எங்களுக்கு ஒரு நாள் போதும் என வெற்றிவேல் பேட்டியளித்து உள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிடுகிறது. அக்கட்சி பதிவு செய்யப்படாத நிலையில், இந்த கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. பொது சின்னம் வழங்க பரிசீலனை செய்யலாம் என தேர்தல் ஆணையத்திடம் கூறியது.

இதனை தொடர்ந்து, புதுடெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் தினகரன் தரப்பில் பொது சின்னம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி, டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுபற்றி அக்கட்சியை சேர்ந்த வெற்றிவேல், பரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எங்களுக்கு ஒரு நாள் போதும் என பேட்டியளித்து உள்ளார்.

நாங்கள் கேட்ட சின்னத்தையே தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது என அக்கட்சியின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, பரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் தெரிவித்து தேர்தலில் வெற்றிபெறுவோம் என அக்கட்சியின் தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு