தமிழக செய்திகள்

ஜேடர்பாளையம்‌ படுகை அணையில் மூழ்கி ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் பலி

ஜேடர்பாளையத்தில் உள்ள படுகை அணையில் மூழ்கி ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் பலியானார்.

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையத்தில் உள்ள படுகை அணையில் மூழ்கி ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் பலியானார்.

சுற்றுலா

சேலம் மாவட்டம் சங்ககிரி மலையடிவார பகுதியை சேர்ந்தவர் ஷாநவாஸ் (வயது 40). ஐஸ்கிரீம் கடை நடத்தி வந்தார். இவர் தனது மனைவி சுமையா, மகன்கள் உமர் சாகித் (15), சையத் சமீத் (13) மற்றும் உறவினர்கள் உள்பட 15 பேருடன் நேற்று நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் உள்ள படுகை அணை பூங்காவிற்கு சுற்றுலா வந்தனர்.

பின்னர் அவர்கள் ராஜா வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஷாநவாஸ் மட்டும் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணை

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மீனவர்கள் உதவியுடன் காணாமல் போன ஷாநவாசை ராஜா வாய்க்காலில் தேடினர். தண்ணீர் அதிகமாக சென்றதால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் போலீசார் பொதுப்பணித்துறையினர் உதவியுடன் ராஜா வாய்க்காலின் ஷட்டர்களை அடைத்தனர். அப்போது ஷாநவாஸ் ராஜா வாய்க்காலில் மூழ்கி இறந்து உடல் ஒதுங்கியது. பின்னர் அவரது உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்