தமிழக செய்திகள்

நாமக்கல் அருகே விபத்தில் மேலும் ஒரு வாலிபர் சாவு

நாமக்கல் அருகே விபத்தில் மேலும் ஒரு வாலிபர் சாவு

நாமக்கல் அருகே உள்ள வள்ளிபுரத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் ரஞ்சித் (வயது 20). ராசாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (20). இவர்கள் இருவரும் கோழிப்பண்ணைகளில் கூண்டு அமைக்கும் தொழில் செய்து வந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வள்ளிபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் நாமக்கல் பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

காவேட்டிப்பட்டி அருகே வந்தபோது நாமக்கல்லில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்ற அரசு பஸ்சும், இவர்களது மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் சென்ற விக்னேஷ் படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்