தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; ஒருவர் படுகாயம்

வெண்ணந்தூரில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

வெண்ணந்தூர்

வெண்ணந்தூர் அருகே உள்ள அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 66). இவர் ராசிபுரம் பகுதியில் இருந்து அத்தனூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அத்தனூர் அருகே உள்ள பழந்தின்னிப்பட்டி பகுதியை சேர்ந்த விஜயமூர்த்தி (44) என்பவர் மோட்டார் சைக்கிளில் வெண்ணந்தூர் பகுதியில் இருந்து ராசிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அத்தனூர் அருகே உள்ள வன விரிவாக்கம் மையம் பகுதியில் சுபாஷ் சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த 2 மோட்டார் வைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 2 பேரும் காயம் அடைந்தனர். பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக படுகாயம் அடைந்த சுபாஷ் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு