தமிழக செய்திகள்

வேன் மோதி ஒருவர் பலி

காவேரிப்பட்டணம் அருகே வேன் மோதி ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

தினத்தந்தி

காவேரிப்பட்டணம்:

வேன் விபத்து

ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா குப்பச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் ருத்ரமூர்த்தி (வயது 48). இவரும், அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் (40) என்பவரும் வேனில், கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா மயிலம்பாடியை சேர்ந்த கோபிநாத் (27) என்பவர் ஓட்டிச் சென்றார்.

அந்த வேன், தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பையூர் கிராம வங்கி பக்கமாக வந்த போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையின் நடுவில் உள்ள தடுப்பு மீது மோதியது.

ஒருவர் பலி

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ருத்ரமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். லோநாதன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து