திண்டுக்கல்,
மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சை.நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு அதிக அளவாக கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அவாகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் இந்த நோய் தொற்றால் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கருப்பணம்பட்டியில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திலும் கருப்பு பூஞ்சை பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 பேர் கருப்பு பூஞ்சை பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.