கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி - ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை

அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன்படி தமிழக முதல் அமைச்சராக வரும் 7 ஆம் தேதி மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.

இதற்கிடையே, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை அதிமுக கூட்டணி வெல்லாத நிலையில், முதல்வர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித்தேர் சரியாக செழுத்த அச்சாணியாக செயல்பட வேண்டிய கடமை இருக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் அதிமுக பணியாற்றும்.

10 ஆண்டுகள் அதிமுக அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு செய்த பணிகளை மக்கள் நன்கு அறிவார்கள். அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை