தமிழக செய்திகள்

வெங்காயம் கிலோ ரூ.150-க்கு விற்பனை

கொடைக்கானல் வாரச்சந்தையில் வெங்காயம் கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த சந்தையில் தக்காளி விலை சதம் அடித்து உச்சத்தை தொட்டது. ஆனால் நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் தக்காளியை மிஞ்சும் அளவுக்கு சின்ன வெங்காயம் விலை உயர்ந்தது. அதன்படி முதல் தரம் வெங்காயம் கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் பல்வேறு காய்கறிகளின் விலையும் உயர்ந்தது.

இதற்கிடையே சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.140, இஞ்சி கிலோ ரூ.280, பீட்ரூட் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பெரிய வெங்காயம் மட்டும் கிலோ ரூ.30-க்கு விற்பனையானது. இதனால் காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதன் காரணமாக வார சந்தையில் கூட்டம் குறைந்து காணப்பட்டது. விலை உயர்வால் குறைவான காய்கறிகளை மட்டுமே பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்