கோப்பு படம் 
தமிழக செய்திகள்

ஆன்லைன் சூதாட்டம்; சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

தினத்தந்தி

சென்னை,

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், ஆன்லைன் சூதாட்டம் குறித்த எந்த சட்டமும் தமிழகத்தில் இதுவரை இயற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிராக மாநில அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது; உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் அரசுக்கு மாற்றுக்கருத்து இல்லை என்று தெரிவித்தார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்