திருச்செந்தூர்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலை தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்துகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.
இந்த தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியாக ஏதேனும் ஓர் பட்டப்படிப்பு போதும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்வை பொதுப்பிரிவினர் (ஓ.சி.) 21 வயது முதல் 32 வயது வரை எழுதலாம். பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஆகியோருக்கு அதிகப்பட்ச வயது வரம்பு இல்லை என்றும் தேர்வாணையம் அறிவித்து இருக்கிறது.
காலிப்பணியிடங்களை பொறுத்தமட்டில் நேர்முகத்தேர்வுடன் கூடிய குரூப்-2 தேர்வு மூலம் 116 காலிப்பணியிடங்களும், நேர்முகத்தேர்வு அல்லாத குரூப்-2ஏ தேர்வு மூலம் 5,413 காலிப்பணியிடங்களும் சேர்த்து மொத்தம் 5,529 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வு எழுத விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வருகிற 23-ந்தேதி கடைசிநாள் ஆகும்.
எழுத்துத்தேர்வில் சிறப்பாக வெற்றி பெற உதவும் வகையில், திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள் வருகிற 19-ந்தேதி தொடங்கி, மே மாதம் 14-ந்தேதி வரை மொத்தம் 50 நாட்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்பு பல்வேறு பணியில் உள்ளவர்களும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ-மாணவிகளும் பயன்பெறும் வகையில் நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். பயிற்சியின்போது 20 மாதிரி தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்.
இந்த பயிற்சியில் சேருபவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளில் இடம்பெறும் பொதுத்தமிழ், இந்திய வரலாறு, இந்திய அரசியல், தற்போதைய நிகழ்வுகள், தமிழ்நாடு வரலாறு, புவியியல், இந்திய பொருளாதாரம், பொது அறிவியல், கணிதம் மற்றும் திறன் அறிதல் ஆகிய தலைப்புகளில் 9 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த புத்தகங்கள் சிவந்தி அகாடமியின் சார்பில் பயிற்சி பெறுபவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க வல்லுனர்களால் தமிழ் வழியாக மட்டுமே ஆன்லைனில் நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்பில் சேர பயிற்சி கட்டணம் ரூ.6,500. பயிற்சியில் சேருவதற்கு விண்ணப்பிக்க வருகிற 17-ந்தேதி கடைசிநாள் ஆகும்.
இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் ஒரு வெள்ளைத்தாளில் புகைப்படம் ஒட்டி, பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்களை குறிப்பிட்டு எழுதி, அத்துடன் ரூ.6,500-க்கான வங்கி வரைவோலை (கனரா வங்கி அல்லது ஐ.ஓ.பி. அல்லது பாரத ஸ்டேட் வங்கி அல்லது இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628216, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்பட மாட்டாது.
மேலும் விவரங்களுக்கு 04639-242998 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9488228404, 7092942644, 9361294426 ஆகிய செல்போன் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்து உள்ளார்.