தமிழக செய்திகள்

கொரோனா பாதிப்பு சீரடைந்த பிறகே 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

கொரோனா பாதிப்பு சீரடைந்த பிறகே 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்று தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தள்ளி வைக்க வேண்டியதின் அவசியம் குறித்தும், இதுகுறித்து அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், 10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்த நிலையில் இன்று சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கொரோனா பாதிப்பு சீரடைந்த பிறகே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்றும்,10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து 2,3 நாட்களில் நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் கூறினார் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்