கோப்பு படம் 
தமிழக செய்திகள்

பட்டாசு ஆலைகளில் விபத்துகளை தவிர்க்க அனுபவம் வாய்ந்த பணியாளர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும் - மத்திய அரசு அதிகாரி வலியுறுத்தல்

பட்டாசு ஆலைகளில் விபத்துகளை தவிர்க்க அனுபவம் வாய்ந்த பணியாளர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும் என்று மத்திய வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி சுந்தரேசன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பட்டாசு ஆலைகளில் விபத்துகளை தவிர்க்கும் வழிமுறை குறித்து மத்திய வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி சுந்தரேசன் கூறியதாவது:-

பட்டாசு ஆலைகளில் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மருந்து கலவையில் ஈடுபட வேண்டும். குறிப்பிட்ட அளவு மட்டும் மருந்து கலவை இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவு மட்டும் பணியாளர்களை பயன்படுத்த வேண்டும். அனுபவம் வாய்ந்த பணியாளர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும். இது விபத்துகளை பெரும் அளவில் குறைக்கும். சம்பந்தப்பட்ட அறைகளில் மட்டுமே பட்டாசு உற்பத்தியை செய்ய வேண்டும்.

திரிகளை அறுக்க சாதாரண கத்தி, பிளேடுகளை பயன்படுத்த கூடாது. பித்தளை அல்லது பாஸ்பரஸ் பிரான்ஸ் கத்திகளை கொண்டு கட்டிங் செய்ய வேண்டும். நின்று கொண்டு பணி செய்ய வேண்டும். சாட்டைத்திரி, கருந்திரி வெட்ட தனித்தனி மேஜைகளை பயன்படுத்த வேண்டும். பட்டாசு தொழிலாளர்கள் பருத்தி ஆடை அணிந்து வேலை செய்ய வேண்டும். அன்றாட கழிவுகளை எரிகுழியில் இட்டு அழித்து விட வேண்டும். மதுஅருந்தி விட்டு பணி செய்ய கூடாது. செல்போன்களை ஆலைக்குள் பயன்படுத்தகூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு